- பிரம்மோத்சவத் திருவிழா
- வள்ளிமலை
- பொன்னாய்
- பிரம்மோத்சவத் தேர் திருவிழா
- வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில்
- காட்பாடி தாலுகா
- வேலூர் மாவட்டம்…
பொன்னை, பிப். 17 : வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பிரமோற்சவ தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தேர் அலங்கார பொருட்கள் வர்ணம் பூசும் வேலை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த வள்ளிமலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்தாண்டு பிரமோற்சவ திருவிழா அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா அடுத்த மாதம் 3ம் தேதி மூஷிக வாகனத்தில் எழுந்தருளும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 4 நாட்கள் பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதன் முன்னதாக தேர் அலங்கரிக்கப்படும் அலங்கார பொருட்கள் வர்ணம் பூசும் வேலை நேற்று முதல் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் தொடர்ச்சியாக பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் முன்னேற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
The post வள்ளிமலையில் பிரமோற்சவத்தையொட்டி அலங்கார பொருட்களுக்கு வர்ணம் பூச்சு appeared first on Dinakaran.
