×

முசிறி அருகே தும்பலம் வனப்பகுதியில் குவியல் குவியலாக கிடக்கும் மருத்துவ கழிவு பொருட்கள்

முசிறி, பிப்.13:முசிறி அருகே தும்பலம் வனப்பகுதியில் குவியல் குவியலாக கொப்பட்டு வரும் மருத்துவ கழிவு பொருட்களால் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முசிறியில் இருந்து தா.பேட் டை செல்லும் வழியில் தும்பலம் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மருத்துவ கழிவுகளான பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகள், காலியான குளுக்கோஸ் பிளாஸ்டிக் பாட்டில்கள்,உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் குவியல் குவியலாக ஆங்காங்கே கொட்டி கிடக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கருதப்படும் இந்த வனத்தில் குரங்குகள், மான்கள், மயில்கள், முயல்கள், காட்டுமாடுகள், கீரிபிள்ளைகள் அதிக அளவில் வசிக்கின்றன. இது தவிர விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் மேச்சலுக்கு வனப்பகுதிக்கு ஓட்டி செல்லப்படுகிறது.

எனவே மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தனபால் என்பவர் கூறுகையில், வனப்பகுதியில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகள், பியூஸ் போன பல்புகள், பழுதான டிவியின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீடுகளில் தேவை இல்லை என தூக்கி எறியப்படும் பழைய மெத்தைகள், ஆகியவற்றையும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். வனப்பகுதியில் தார்சாலை செல்வதால் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து வீசிவிட்டுச் செல்வதற்கு ஏதுவாக உள்ளது. வனப்பகுதியை குப்பைகள் போடும் இடமாக கருதுவது தவறானது. வனவிலங்குகளுக்கும், விவசாயிகளின் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இச்செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை வனத்துறையினர் கண்டுபிடித்து காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர வனப்பகுதிகளில் மது பிரியர்கள் சிலர் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவது, காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றையும் வீசி செல்கின்றனர். மதுபோதையில் சிலர் மது பாட்டில்களை உடைத்தும் போடுகின்றனர். இதனால் வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில், வனப்பகுதியில் அமர்ந்து சிகரெட் புகைப்பதால் தீ விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வன காவலர்களை கூடுதலாக பணியில் அமர்த்தி வனப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். வனப்பகுதிகளில் மது பிரியர்கள் சிலர் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவது, காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றையும் வீசி செல்கின்றனர். மதுபோதையில் சிலர் மது பாட்டில்களை உடைத்தும் போடுகின்றனர். இதனால் வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

The post முசிறி அருகே தும்பலம் வனப்பகுதியில் குவியல் குவியலாக கிடக்கும் மருத்துவ கழிவு பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Thumbalam forest ,Musiri ,Thumbalam ,Tha.Ped Tai… ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...