×

கொத்தமல்லி விலை வீழ்ச்சி

போச்சம்பள்ளி, பிப்.13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலமங்கலம், பேரிகை, பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொத்தமல்லி 30 முதல் 40 நாட்களில் அறுவடை செய்யலாம். கடந்த மாதம் கொத்தமல்லி நல்ல மகசூல் கிடைத்துள்ளதால், வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். அப்போது ஒரு கட்டு கொத்தமல்லி ₹50வரை விற்பனையானது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கட்டு ₹10க்கு விற்பனையாகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தற்போது போச்சம்பள்ளி பகுதிகளில் டெம்போ மூலம் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.

The post கொத்தமல்லி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : BOCHAMPALLI ,KRISHNAGIRI DISTRICT ,OSUR ,KELAMANGALAM ,PERIGAI ,BAGALUR ,UTTANAPALLI ,Dinakaran ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை