- ஆர்பிஐ
- ஆளுநர் மல்ஹோத்ரா
- மும்பை
- இந்திய ரிசர்வ் வங்கி
- கவர்னர்
- சஞ்சய் மல்ஹோத்ரா
- சக்தி காந்த தாஸ்
- ரிசர்வ் வங்கி
- தின மலர்

மும்பை: கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் முடிந்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். இந்நிலையில், மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து தவிர வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் முன்பு வெளியிடப்பட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் வழக்கமாக சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆர்பிஐ கவர்னர் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ50 நோட்டுகள் appeared first on Dinakaran.
