
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷைன் டோம் சாக்கோ. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2015ம் ஆண்டில் கொச்சியில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து கொக்கைன் போதைப்பொருளுடன் ஷைன் டோம் சாக்கோ கைது செய்யப்பட்டார். அவருடன் 7 மாடல் அழகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதுதான் கேரளாவில் பதிவு செய்யப்பட்ட முதல் கொக்கைன் வழக்காகும். சில வருட சிறைவாசத்திற்கு பின்னர் ஷைன் டோம் சாக்கோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ஷைன் டோம் சாக்கோ உள்பட 8 பேரையும் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
The post போதை பொருள் வழக்கில் இருந்து பிரபல நடிகர் விடுவிப்பு: எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
