×

ஹஜ் புனித யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை: புதிய நடைமுறையை அறிவித்தது சவுதி அரேபிய அரசு

சவுதிஅரேபியா: ஹஜ் புனித யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை விதிக்கப்படுவதாக சவுதிஅரேபியா அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்போருக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி உள்ள நிலையில் புதிய விதிமுறைகளை சவுதி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல முதல் முறையாக யாத்திரையில் பங்கேற்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா, அல்கீறியா, எகிப்த், வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சவுதிக்கு வந்து செல்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறையால் 14 நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக ஒரு மாதம் மட்டுமே சவுதியில் தங்க முடியும் .

 

The post ஹஜ் புனித யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை: புதிய நடைமுறையை அறிவித்தது சவுதி அரேபிய அரசு appeared first on Dinakaran.

Tags : Hajj pilgrimage ,Saudi Arabian government ,Saudi Arabia ,Hajj ,Saudi government ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!!