×

புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

மதுரை,பிப்.11: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், எம்.ஆர்.பி. செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.5 லட்சமும், பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் தமிழ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நீதிராஜா, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன், ஜாக்டோ-ஜியோ நவநீதகிருஷ்ணன், மதுரை மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல் காதர் பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் மற்றும் வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tarna ,Madurai ,Chitnawu Staff, M. R. B. Limited ,Association ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா