×

ஏபிஎன் ஆம்ரோ டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸி வீரரை வென்றார்

ராட்டர்டாம்: நெதர்லாந்தில் நடந்த ஏபிஎன் ஆம்ரோ உலக டென்னிஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் அல்காரஸ் அபாரமாக ஆடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரில் ஏபிஎன் ஆம்ரோ உலக டென்னிஸ் கோப்பைக்கான போட்டிகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரசும், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி மினாரும் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். இரண்டாவது செட், டி மினார் வசம் சென்றது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய அல்காரஸ் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். இதன் மூலம், 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற அல்காரஸ் சாம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கோப்பையையும் கைப்பற்றினார்.

The post ஏபிஎன் ஆம்ரோ டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸி வீரரை வென்றார் appeared first on Dinakaran.

Tags : ABN AMRO ,Alcaraz ,Rotterdam ,ABN AMRO World Tennis Cup ,Netherlands ,Rotterdam, Netherlands ,Dinakaran ,
× RELATED இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?