×

குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

 

ஈரோடு, பிப். 10: குடிநீர் குழாய் உடந்து தண்ணீர் வெளியேறிய நிலையில், தினகரன் செய்தி எதிரொலியாக உடைப்பு சரி செய்யப்பட்டது.  ஈரோடு, கனிராவுத்தர் குளத்தில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான சாலையின் நடுவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஈரோடு மாநகராட்சி, 8வது வார்டில் உள்ளது கனிராவுத்தர் குளம். இங்குள்ள சத்தி சாலையில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் வினியோக திட்டக் குழாய்கள் பதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள எல்லப்பாளையம், பெரியசேமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்திரோட்டில் உள்ள கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பெரிய சேமூர் செல்லும் பிரதான சாலையின் நடுவில், தார்சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த பல நாட்களாக தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம், சாலையில் பெருக்கெடுத்து ஓடி பல நாட்களாக வீணாகி வந்தது.

இதனால், அப்பகுதி குடியிருப்புகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தினகரன் செய்தி எதிரொலியாக சில நாட்களுக்கு முன்னர் அந்த குடி நீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மேலும், தண்ணீர் வெளியேறி தார்சாலையில் ஏற்பட்ட விரிசலும் சரி செய்யப்பட்டுள்ளது.

The post குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,Kanirawuthar pond ,Periya Seymur ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது