×

பா.ஜ ஆட்சிக்கு வழிவகுத்தது 16 தொகுதிகளில் ஆம்ஆத்மி வெற்றியை தடுத்த காங்கிரஸ்

* ஷீலா தீட்சித் ஆட்சியை வீழ்த்தியதற்கு பழிக்குபழி, கெஜ்ரிவால், சிசோடியா தோல்விக்கும் காரணம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. ஆனால் ஆம்ஆத்மியின் வெற்றியை 16 தொகுதிகளில் பறித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. 1998 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியை வீழ்த்தி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. அதற்கு தற்போது காங்கிரஸ் பழிதீர்த்துள்ளது.

இந்த பழிதீர்த்தால் கெஜ்ரிவால், சிசோடியா, சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் 4089 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகனுமான சந்தீப் தீட்சித் அந்த தொகுதியில் 4568 ஓட்டுகள் பெற்று இருந்தார். ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் சிசோடியா 675 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பர்கத்சூரி 7350 ஓட்டு பெற்று இருந்தார். துவர்க்கா, ஹரிநகர், மங்கோல்புரி, நரேலா, ஷாதரா, உத்தம்நகர், விகாஷ்புரி ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தை நெருங்கும் அளவுக்கு வாக்குகளை காங்கிரஸ் பெற்று இருந்தது. இதனால் ஆம்ஆத்மி வீழ்ச்சிக்கு நேரடியாக காங்கிரஸ் காரணமானது இந்த தேர் தல் மூலம் தெரியவந்துள்ளது.

தொகுதி வெற்றி வித்தியாசம் காங்கிரஸ்
1. பத்லி 15,163 41,071
2. சதார்பூர் 6239 6601
3. கிரேட்டர் கைலாஷ் 3188 6711
4. ஜங்புரா 675 7350
5. கஸ்தூரிபாநகர் 11,048 27,019
6. மதிப்பூர் 10,899 17,958
7. மாளவியாநகர் 2131 6770
8. மெக்ருலி 1782 9338
9. முண்டகா 10,280 10,043
10. முஸ்தபாபாத் 17,578 11,763
11. நங்கோலிஜாட் 26,251 32,028
12. புதுடெல்லி 4089 4568
13. ராஜேந்தர்நகர் 1231 4015
14. சங்கம்விஹார் 344 15,868
15. திமர்பூர் 1168 8361
16. திரிலோக்பூர் 392 6147

The post பா.ஜ ஆட்சிக்கு வழிவகுத்தது 16 தொகுதிகளில் ஆம்ஆத்மி வெற்றியை தடுத்த காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Pa ,Congress ,Aamatmi ,Kejriwal ,Sisodia ,Sheila Dixit ,Delhi ,Legislature ,Amadmi ,Jaya ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...