×

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரேமாதிரியான கட்டண கொள்கை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலைப்போக்குவரத்து அமைச்சகம் ஒரே மாதிரியான கட்டண கொள்கையில் பணியாற்றி வருகின்றது. இது பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பானது இப்போது அமெரிக்காவுடன் ஒத்துப்போகிறது. தேசிய நெடுஞ்சாலையில் தடையற்ற உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான சுங்க வசூல் முறையை முதலில் செயல்படுத்துவதற்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பயணிகள் அளிக்கும் புகார்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் தனியார் கார்கள் சுமார் 60 சதவீதமாக இருந்தாலும், இந்த வாகனங்களில் இருந்து வரும் சுங்க வருவாய் பங்கானது வெறும் 20 முதல் 26 சதவீதமாகவே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் , நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் பயனர்களின் அதிருப்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது”என்றார்.

The post தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரேமாதிரியான கட்டண கொள்கை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,New Delhi ,Delhi ,Union ,Road ,Transport Minister ,Road Transport Ministry ,Union Minister Nitin Gadkari ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்