×

கைலாசநாதர் கோயிலில் சமபந்தி விருந்து

திருச்செங்கோடு, பிப்.4: தமிழ்நாடு இந்து சமயஅறநிலையத்துறை சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து கைலாசநாதர் கோயிலில் நடந்தது.மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர்மன்ற துணை தலைவர், நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், அர்ஜூனன், அருணாசங்கர், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கைகலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

The post கைலாசநாதர் கோயிலில் சமபந்தி விருந்து appeared first on Dinakaran.

Tags : Samabandhi feast ,Kailasanathar temple ,Thiruchengode ,Perarignar ,Anna ,Tamil Nadu Hindu Religious and Endowments Department ,Western District DMK ,Mathura Senthil ,Thiruchengode Municipal Council ,President ,Nalini Sureshbabu ,Dinakaran ,
× RELATED நைனாமலை அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா