×

8ம் தேதி ரஞ்சி கோப்பை காலிறுதி விதர்பா அணியுடன் தமிழகம் மோதல்

மும்பை: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு தமிழ்நாடு, குஜராத், மும்பை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.  ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் 90வது தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தன. இதில் பங்கேற்ற 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.

லீக் சுற்று முடிவில், தமிழ்நாடு, சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, ஜம்மு – காஷ்மீர், கேரளா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றன. காலிறுதி போட்டிகள் வரும் 8ம் தேதி நடக்க உள்ளன. நாக்பூரில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, விதர்பா அணியுடன் மோதவுள்ளது. தவிர, ஜம்மு காஷ்மீர் – கேரளா, அரியானா – மும்பை, சவுராஷ்டிரா – குஜராத் அணிகள் காலிறுதியில் மோதவுள்ளன.

The post 8ம் தேதி ரஞ்சி கோப்பை காலிறுதி விதர்பா அணியுடன் தமிழகம் மோதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vidarbha ,Ranji Trophy quarter-final ,Mumbai ,Gujarat ,Ranji Trophy cricket ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்