×

இளையராஜா பாடலுக்கு திடீர் தடை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகத்தியா’. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே’ (மூடுபனி படத்தில் இடம்பெற்றது) பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரீ-கிரியேட் செய்துள்ளார். இந்நிலையில் இதனை எதிர்த்து ‘என் இனிய பொன் நிலாவே’ உட்பட, ‘மூடு பனி’ படத்தின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருக்கும் சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

எதிர்தரப்பினர் முறையான அங்கீகாரம் இல்லாமல், வரவிருக்கும் தமிழ் படத்திற்காக பாடலை மீண்டும் உருவாக்கியதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் பதிப்புரிமையை, சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதையும் நீதிமன்றம் தடை செய்தது.

The post இளையராஜா பாடலுக்கு திடீர் தடை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Jeeva ,Vijay ,YUAN SHANKAR RAJA ,WALES ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...