×

உலக ஈரநில நாள் போட்டிகள்

சேந்தமங்கலம், ஜன.31: கொல்லிமலையில் வனத்துறையின் சார்பில், 2ம்தேதி ஈரநில நாள் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட வனத்துறையின் சார்பில், உலக ஈர நில நாளை முன்னிட்டு ஓவியப்போட்டி, வினாடி-வினா, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டிகள் வரும் 2ம்தேதி அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை மதியம் உணவு இலவசமாக வழங்கப்படும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் உமா பரிசு வழங்குகிறார். கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post உலக ஈரநில நாள் போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : World Wetlands Day Competitions ,Senthamangalam ,Forest Department ,Kollimalai ,Wetlands Day Sports Competition ,Namakkal District Forest Department ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்