- பாதுகாப்பு விழிப்புணர்வு
- பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்
- பூந்தமல்லி
- தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
- போக்குவரத்து
- பவனீஸ்வரி
- பாதுகாப்பு
- தின மலர்
பூந்தமல்லி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் பூந்தமல்லியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் அன்பு, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் கனகராஜ், தனியார் கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணி பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.
இந்த பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணியாததால் விளையும் அபாயங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன் எச்சரித்து கொடுத்து அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டிகளிடம் சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கினர். இதில் பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, போக்குவரத்து போலீசார், தனியார் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்க மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
