×

வாலிகண்டாபுரம், மாத்தூர் அரசு பள்ளி மாணவர்களின் 3 கட்டுரைகள் மாநில அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 45 கட்டுரைகளில் 4-பள்ளிகளைச் சேர்ந்த 5-கட்டுரைகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இடம் பெறத் தேர்வாகியுள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு, பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இம்மாட்டிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பவித் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், கல்வி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை அரசு கல்லூரியின் வேதியல் துறைத்தலைவர் பேராசிரியர் பிரபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த மாநாட்டின் தலைப்பு நீர் மேலாண்மை. இந்த தலைப்பை மையமாகக் கொண்டு மாணவர்கள் பல்வேறு களப்பணிகளை செய்து அவரவர் கிராமத்தின் நீர்நிலைகளை பற்றி எல்லாம் ஆய்வுகள் செய்து கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இந்த மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் ராமர் ஒருங்கிணைத்து நடத்தி னார். 15க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், 2 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 90மாணவ, மாண வியர் இந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு தாங்களுடைய அறிவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து கருத்துகளைக் கூறினர். இந்த மாநாட்டில், 45 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆய்வுக் கட்டுரைகளில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 4 பள்ளிக ளைச் சேர்ந்த மாணவ மாணவியரின் ஐந்து கட்டு ரைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

இதன்படி கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹரிஷ், அஸ்வந்த், லிங்கேஸ்வரன், சுபிக்ஷா  ஆகியோர் சமர்ப்பித்த 2-கட்டுரைகளும், அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுருதி, அஜிசியா, வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் பாலசுப்பிரதா, ரித்திகா, கீழ மாத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் இனியா, வித்யா ஆகிய 3 பள்ளிகளின் மாணவ, மாணவியர் சமர்ப்பித்த தலா ஒரு கட்டுரைகளும் என 5 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 5 ஆய்வுக் கட்டுரைகளும் மாநில அளவில் நடை பெறும் குழந்தைகள் மாநாட்டில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாலிகண்டாபுரம், மாத்தூர் அரசு பள்ளி மாணவர்களின் 3 கட்டுரைகள் மாநில அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Valikandapuram ,Mathur government schools ,Perambalur ,-level children's science conference ,-level children's ,Tamil Nadu Science Movement ,science ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...