- ஆதிரெட்டியூர் சித்தர் காட்டு மகாசக்தி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
- அந்தியூர்
- மகாசக்தி அம்மன்
- கோவில்
- ஆதிரெட்டியூர்
- சித்தர்
- கது
- ஈரோடு மாவட்டம்
- குண்டம் திருவிழா
அந்தியூர், ஜன.30: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆதிரெட்டியூர் சித்தர் காட்டில் பிரசித்தி பெற்ற மகாசக்தி அம்மன் கோவில் உள்ளது. இதன் குண்டம் திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த பூச்சாட்டுதல் தொடங்கியது. நேற்று, 20 அடி அகல வட்ட குண்டம் அமைக்கப்பட்டு விறகு கட்டைகளால் தீ மூட்டி சமன்படுத்தினர். பின்பு கோவில் தலைமை பூசாரி சித்தர் அக்கினி குண்டத்தில் முதலில் இறங்கி தீ மிதித்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குண்டம் திருவிழாவின்போது மகாசக்தி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஆதிரெட்டியூர், கொல்லப்பாளையம், மறவன் குட்டை, அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
The post ஆதிரெட்டியூர் சித்தர் காடு மகாசக்தி அம்மன் கோயில் குண்டம் திருவிழா appeared first on Dinakaran.
