×

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜவை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம்

திருமலை: டெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜ என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜ தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி பாஜ முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதேபோன்று தங்கள் கூட்டணி கட்சிகளையும் டெல்லிக்கு அழைத்து பிரசாரம் செய்ய பாஜ திட்டமிட்டுள்ளது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திராவின் தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை ஏற்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி செல்ல உள்ளார். இதேபோன்று ஜனசேனா தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன்கல்யாணும் டெல்லி செல்கிறார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தனித்தனியாக பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜவை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,BJP ,Delhi Assembly elections ,Tirumala ,Aam Aadmi Party ,Congress ,BJP… ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...