×

பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு நீதிபதிகளை நோக்கி செருப்பு வீசிய கைதி

பூந்தமல்லி: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த 2023ம் ஆண்டு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கருக்கா வினோதுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற காரணத்திற்காக வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, திடீரென கருக்கா வினோத் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி ஒன்றன்பின் ஒன்றாக நீதிபதியை நோக்கி வீசினார். இதில் ஒரு காலனி நீதிபதியின் முன்பு இருந்த மேசையின் மீதும் மற்றொரு காலணி நீதிபதி முன்பு விழுந்தது. இதனால் நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அப்போது, கருக்கா வினோத் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஆவேசமாக முழக்கமிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருக்கா வினோத்தை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கருக்கா வினோத் ஆத்திரமடைந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு நீதிபதிகளை நோக்கி செருப்பு வீசிய கைதி appeared first on Dinakaran.

Tags : Poonamallee ,Rowdy Karuka Vinoth ,Nandanam, Chennai ,Guindy, Chennai ,Puzhal… ,
× RELATED திருத்தணியில் வாலிபரை...