பண்ருட்டி, ஜன. 28: பண்ருட்டி அருகே திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் சிவராத்திரி வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத சிவராத்திரி வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி மூலவர் லிங்கத் திருமேனிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சரக்கொன்றைநாதர், பஞ்சமுக லிங்கம், லிங்கோத் பவர் உள்ளிட்ட லிங்கத் திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சிறப்பு மலர் அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது.
The post வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வழிபாடு appeared first on Dinakaran.
