×

பாஜ தேசிய செயலாளர் கைது

திருப்பரங்குன்றம்: பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தனது பிறந்தநாளையொட்டி மதுரை அருகே திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் மலை மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் பிரார்த்தனை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதுரை வந்த அவர் கப்பலூர் அருகே தனியார் ஓட்டலில் தங்கி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர், மதியத்திற்கு மேல் திருப்பரங்குன்றத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மலை மேலுள்ள தர்காவிற்கு செல்ல தடை இருப்பதாக அவரிடம் கூறினர். இதுதொடர்பாக, பாஜவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி வேலூர் இப்ராகிம் திருப்பரங்குன்றம் செல்ல முயன்றதால் போலீசார் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

The post பாஜ தேசிய செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : BAJA NATIONAL SECRETARY ,Bajaj ,Minority Division ,National Secretary ,Vellore Ibrahim ,Thiruparangunram Murugan Temple ,Madurai ,Sikander Targa ,Maduro ,Bajaj National Secretary ,Dinakaran ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...