×

சாலையோர வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி


திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே சாலையோர வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கேளம்பாக்கம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் சாலையோர உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். இதில், உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் லால்வினா பங்கேற்று, சாலையோர வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் சாலையோர உணவு வணிகர்கள், ஓட்டல் மற்றும் தள்ளுவண்டி உணவு வணிகர்கள், சிறு கடைகள் நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துதல், தரச்சான்று பெற்ற எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை பயன்படுத்துதல், அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் அனுமதி ஆகியவற்றை முறையாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டது.

முகாமில், தென்மண்டல உணவு பாதுகாப்பு இயக்குநர் பஞ்சம், துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், சாலையோர உணவு வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சாலையோர வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Melakottaiyur VIT University ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...