×

இமாச்சலில் போலீஸ் காவலில் மரணம் ஐஜி உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை

சண்டிகர்: இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 16வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான சூரஜ் என்பவர் போலீஸ் நிலையத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இமாச்சல் பிரதேச காவல்துறை ஐஜி ஜாகூர் ஹைதர் ஜைதி மற்றும் 7 காவலர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஐஜி ஜாகிர் ஹைதர் மற்றும் காவலர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.1லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post இமாச்சலில் போலீஸ் காவலில் மரணம் ஐஜி உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Chandigarh ,Kotkai ,Shimla district ,Suraj ,IG ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...