மும்பை: இந்தியடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோகித்சர்மா. இவர் அண்மை காலமாக பார்ம் இழந்து தடுமாறி வருகிறார். கடைசி 8 டெஸ்ட்டில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் சொற்ப ரன்களில் அவர் அவுட் ஆனதால் விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரோகித் தனது கிரிக்கெட்டின் ஆழ்மனதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் கூறி இருந்தார். கவாஸ்கரின் இந்த விமர்சனம் தேவையற்றது மற்றும் மிகவும் எதிர்மறையானது என்று ரோகித்சர்மா கருதினார். இதுதொடர்பாக அவர் பிசிசிஐயிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
The post பார்ம் குறித்து விமர்சனம்: கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் ரோகித்சர்மா புகார் appeared first on Dinakaran.
