பிரிட்டன்: பிரிட்டனில் ரூ.2500 கோடி சொத்துக்கு வாரிசான 23 வயது இளைஞருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டஃப் மாவட்டத்தில் குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகளாகத் கல்லூரி நண்பர்களானவில்லியம் புஷ் மற்றும் டைலன் தாமஸ் ஆகியோர் தங்கி வந்துள்ளனர். 23 வயதான வில்லியம் தமது காதலியுடன் தனியாக செல்ல முடிவு செய்ததை அடுத்து பீட்டர் பைஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டான்லி தாமஸின் பேரனான டைலன் தாமஸ் தன்னுடன் தங்கி இருந்த தனது நண்பர் வில்லியம் புஜ்ஜை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.
வில்லியம் தமது காதலியுடன் அதிக நேரம் செலவிடுவதும், தம்மை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கொலைகான காரணமாக கூறப்படுகிறது. டைலன் தாமஸ் தனது அறையில் இருந்த கிச்சன் கத்தியை கொண்டு 37 முறை வில்லியம்சை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது திட்டமிட்ட கொலை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் செய்யப்பட்டது. இதை அடுத்து டைலன் தாமஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து கஜஃப் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
The post நண்பன் கொலை; பிரிட்டனில் கோடீஸ்வரரின் வாரிசுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.
