×

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்த தடை நீட்டிப்பு

 

இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காம் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்தாண்டு மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9ம் தேதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானும், தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது. இதற்கிடையே, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மார்ச் 23ம் தேதி வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஏப்ரல் 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.

Tags : Islamabad ,Pahalkam ,Jammu ,Kashmir ,India ,Operation Chintour ,
× RELATED அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை...