×

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவிடம் வீழ்ந்த சென்னை

கோவா: கோவாவில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னையின் எப்சி – எப்சி கோவா இடையிலான போட்டி நடந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோவா வீரர் இகெர் குவாகராட்ஸெனா அதிரடியாக ஆடி முதல் கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து 26வது நிமிடத்தில் கோவாவின் ஆகாஷ் சங்வான் மீண்டும் ஒரு கோலடித்ததால் அந்த அணி வலுவான நிலையை எட்டியது. அதன் பின் தற்காப்பு ஆட்டத்தில் கோவா ஈடுபட்டது. அதனால் கடைசி வரை சென்னையின் எப்சி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணி அபார வெற்றி பெற்றது.

The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவிடம் வீழ்ந்த சென்னை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Goa ,ISL football ,Chennai FC ,FC Goa ,Jawaharlal Nehru Stadium ,Iker Kwakaratsena ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட்; கான்வே 150; லாதம் சதம்