லக்னோ: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி, கடும் பனிமூட்டம் காரணமாக கைவிடப்பட்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா, 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், கவுகாத்தியில் நேற்று இரவு 7 மணிக்கு, 4வது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போட்டி துவங்கும் சமயத்தில் மைதானத்தில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. அதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின், இரவு 9.30 மணி வரை அவ்வப்போது மைதானத்துக்கு நடுவர்கள் வந்து நிலைமையை பரிசோதித்தனர். கடைசி வரை நிலைமை சீராகாததால், போட்டி கைவிடப்பட்டது.
