மவுன்ட் மவுங்கானுய்: வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடி வரும் நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 273 ரன்கள் குவித்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 115 ரன்களுடனும், டெவான் கான்வே 150 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
