×

பனங்கள்ளு சீசன் துவக்கம் பனங்கள்ளு இறக்க முயன்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை: கிராமப்புறங்களில் ஆய்வின்போது டிஎஸ்பி எச்சரிக்கை

 

செய்யூர், ஜன.26: பனங்கள்ளு சீசன் துவங்கியுள்ளநிலையில், செய்யூர், சூனாம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது, ‘பனங்கள்ளு இறக்க முயன்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா கடும் எச்சரிக்கை விடுத்தார். இதனால், பனங்கள் இறங்குபவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டார பகுதியில் ஆண்டுதோறும், இம்மாதம் தொடங்கி 4 மாதங்கள் வரை பனை ஏறும் தொழிலாளர்கள் விதிகள் மீறி பனங்கள்ளு இறக்கி விற்பனை செய்து வருவது வழக்கம். சட்டவிரோதமாக பனங்கள்ளு இறக்குவது குற்றம் என்பதால் காவல்துறை கிராமப்புறங்களில் சோதனை மேற்கொண்டு பனங்கள்ளு இறக்குபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு பனங்கள்ளு சீசன் துவங்கியுள்ள நிலையில் செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா தலைமையில், சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட போலீசார், விதிகள் மீறி பனங்கள்ளு இறக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டதோடு, பனங்கள்ளு இறக்க முயன்றவர்களின் பானைகளை உடைத்து, தொடர்ந்து பனங்கள்ளு இறக்க முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

The post பனங்கள்ளு சீசன் துவக்கம் பனங்கள்ளு இறக்க முயன்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை: கிராமப்புறங்களில் ஆய்வின்போது டிஎஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panangallu Season ,Panangallu ,Jaipur ,Panangalu season ,Sunambed ,Maduranthakam ,DSP ,Megala ,Panangalu ,Banangaloo Season ,Banangalle ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...