×

திமுகவில் இணைந்த மகளுக்கு சத்யராஜ் வாழ்த்து

சென்னை: திமுகவில் இணைந்த மகளுக்கு வீடியோ வெளியிட்டு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சத்யராஜ் மகளான திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார். இதனிடையே சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் சத்யராஜ், தனது மகள் தி.மு.கவில் இணைந்தது குறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் அன்பு மகள் திவ்யா, திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதற்கு என்னுடைய மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் வழியில் சமூக நீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றிநடை போட மனமார வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

The post திமுகவில் இணைந்த மகளுக்கு சத்யராஜ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sathyaraj ,DMK ,Chennai ,Divya ,Magilmati ,Tamil Nadu ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...