×

வளைவுகளில் முந்த மாட்டேன் விழிப்புணர்வு பேரணியில் நீதிபதி முன் உறுதியேற்பு

அறந்தாங்கி : ஆவுடையார்கோயில் வட்ட சட்டப்பணிகள் குழு, அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும், அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறை, அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கமும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பூரணஜெய ஆனந்த் அறிவுறுத்தலின்படி, அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் துரை வழிகாட்டுதல்படி ஆவுடையார்கோயில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் டோரத்தி தலைமையில் பேரணி ஆவுடையார்கோயில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கியது.

இதில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டமாட்டேன். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்ட மாட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டேன். அதிவேகமாக வாகனம் ஓட்டமாட்டேன். சீட்பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டமாட்டேன். இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் பயணம் செய்ய மாட்டேன்.

ஆளில்லா ரயில்வே கேட்டை எச்சரிக்கையுடன் கடப்பேன். வாகனத்தை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்க மாட்டேன். சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடப்பேன். போக்குவரத்துக் காவலரின் கை சைகைகளை மதித்து நடப்பேன். பேருந்தில், படியில் நின்று பயணம் செய்ய மாட்டேன். ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ மாட்டேன். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க மாட்டேன்.

குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்த மாட்டேன். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி கொடுப்பேன். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பமாட்டேன்.

நான் சாலை விபத்திற்கு காரணமாக இருக்கமாட்டேன். நான் சாலை விதிகளை பின்பற்றுவேன், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவேன். என பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மேலும்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியும், அவற்றை முழக்கமிட்டும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிறைவாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பில், பிரதிபலிப்பான்களையும் மாணவர்கள் ஒட்டினர். பேரணியில்அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கவிதா, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை வரவேற்றார். ஆவுடையார் கோயில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags : Aranthangi ,Avudayarkoil Circle Legal Services Committee ,Aranthangi Motor Vehicle Inspectorate Office ,Aranthangi Traffic Police ,Aranthangi Government Arts and Science College National Welfare Project College Road Safety Association ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...