×

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

சென்னை: நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.3000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சரியாக விழாவிட்டால் கண் கருவிழி பதிவு முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கலாம் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை + ரூ.3000, நாளையும் வழங்கப்படும்.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்