×

பிடிஓ அலுவலக கட்டிடம் இடிப்பு

வேப்பனஹள்ளி, ஜன.21: வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், வேளாண் விரிவாக்க அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடம் பழுதடைந்து, சிமென்ட் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பழைய கட்டிடத்தை பொக்லைன் இயந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிடிஓ அலுவலக கட்டிடம் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : PDO ,Veppanahalli ,Agricultural Extension Office ,Veppanahalli Block Development Office ,Dinakaran ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு