- அல்கராஸ்
- ஜோகோவிக்
- அரினா சபலெங்கா
- பெலாரஸ்
- ரஷ்யா
- அனஸ்தேசியா பாவ்லியூச்சென்கோவா
- கோகோ கப்
- ஐக்கிய மாநிலங்கள்
- ஸ்பெயினின்...
- தின மலர்
இன்று நடக்கும் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனை, பெலாரசின் அரைனா சபலென்கா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா மோதுகின்றனர். மற்றொரு மகளிர் காலிறுதியில் உலகின் 3ம் நிலை வீராங்கனை, அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினை சேர்ந்த, 11ம் நிலை வீராங்கனை பவுலா படோஸா மோதுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஒன்றில் உலகின் 3ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், உலகின் 7ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் களம் காணுகின்றனர். ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் 10 முறை பதக்கம் வென்ற ஒரே வீரராக ஜோகோவிச் திகழ்கிறார். 37 வயதாகும் அவர் இம்முறையும் வென்று புதிய வரலாறு படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் போபண்ணா- சீன வீராங்கனை சுவாய் ஸாங் இணை, ஆஸ்திரேலியா வீரர் ஜான் பியர்ஸ் – ஆஸி வீராங்கனை ஒலிவியா கடேக்கி இணையுடன் மோதவுள்ளனர்.
The post காலிறுதியில் அல்காரசுடன் மோதல்: ஜோகோவிச் எனும் காட்டாறு படைக்குமா சாதனை வரலாறு? appeared first on Dinakaran.
