×

இந்தியாவின் ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு திடீர் திருமணம்

புதுடெல்லி: 2021 ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வீரர் இரண்டு பதக்கம் (தங்கம், வெள்ளி) வென்றவரும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு திடீரென திருமணம் நடந்துள்ளது. ஹிமானி மோர் என்ற பெண்ணை கரம்பிடித்துள்ள நீரஜ் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை நேற்று சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் குறித்து நீரஜ் சோப்ராவின் மாமாவிடம் விசாரித்த போது, இந்த திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக குறிப்பிட்டார். நீரஜின் மனைவி ஹிமானி அரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்தவர் என்றும், அவர் அமெரிக்காவில் படித்தவர் என்றும் கூறப்படுகிறது. ஹிமானி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் என்பதோடு அவர் விளையாட்டு மேலாண்மை குறித்த இளங்கலை படிப்பை படித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post இந்தியாவின் ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு திடீர் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,New Delhi ,2021 Olympic series ,2024 Paris Olympic series ,India ,Himani ,
× RELATED இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?