- டாஸ்மாக்
- பொங்கல் திருவிழா
- வேலூர், திருப்பத்தூர் மாவட்டம்
- வேலூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தீபாவளி
- புதிய ஆண்டு
வேலூர், ஜன.18: ேவலூர், திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகையொட்டி 3 நாட்களில் ₹21 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அதற்கேற்ப முன்கூட்டியே டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி பல்வேறு மது வகைகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி போகி பண்டிகையும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை நாட்களில் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் திரண்டு மது வகைகளை வாங்கினர். மேலும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அதற்கு முன் நாளான பொங்கல் பண்டிகையன்று விற்பனை களைக்கட்டியது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகள் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொங்கல் பண்டிகையொட்டி 25 சதவீத மது பானங்கள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் ₹3 கோடி வரை விற்பனை நடப்பது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் ₹21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பொங்கல் அன்று மட்டும் ₹7.80 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டாஸ்மாக் கடைகளில் 3 நாளில் ₹21 கோடிக்கு மது விற்பனை பொங்கல் பண்டிகையொட்டி களைகட்டியது வேலூர், திருப்பத்தூர் மாவட்ட appeared first on Dinakaran.
