×

சமத்துவ பொங்கல் விழா

ஓசூர், ஜன.17: ஓசூர் ஒன்றியம், பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், நேற்று பள்ளி மேலாண்மை குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி விஜி தலைமை வகித்து, சமத்துவ பொங்கல் வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகள் 650 பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் செய்திருந்தார்.

The post சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Pongal Festival ,Hosur ,Hosur Union ,Padarapalli Government Middle School ,School Management Committee ,Chairperson ,Viji ,Samathuva Pongal ,Dinakaran ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு