×

சோழவரம் ஒன்றியத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து பராமரிப்பில்லாத குளம்

புழல்: சோழவரம் ஒன்றியத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து பராமரிப்பில்லாமல் காணப்படும் குளத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.சோழவரம் ஒன்றியம் ஆங்காடு காலனி குளம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த குளம் நிரம்பியது. இதில் ஆகாயத்தாமரைகள், செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை, செடிகொடிகளை அகற்றி குளத்தைச் சுற்றி தடுப்புச் சுவர்கள் அமைத்து குளத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட ஆங்காடு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கோயில்களுக்குச் சொந்தமான குளங்கள் பல உள்ளன. இந்த குளங்களை உரிய முறையில் பராமரிக்காததால் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் வர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து குளங்களில் வளர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி தடுப்புச் சுவர்களை அமைத்து கழிவுநீர் விடுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சோழவரம் ஒன்றியத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து பராமரிப்பில்லாத குளம் appeared first on Dinakaran.

Tags : Cholavaram Union ,Puzhal ,Angada Colony ,
× RELATED ஆரணி அருகே ரூ.12 லட்சத்தில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தார்