×

சாகித்திய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். கலைஞர் 97ம் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த விருதாளர்களுக்கு அரசு மூலமாக ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது. அதன்படி, சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன், ப.பாஸ்கரன் (எ) பாவண்ணன் ஆகியோருக்கு தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக வளாக திட்டப்பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்ற சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.மணி (எ) நிர்மாலயா, பி.க.ராஜேந்திரன் (எ) இந்திரன், கவுரி கிருபானந்தன், க.பூரணச்சந்திரன், தி.மாரிமுத்து (எ) யூமா வாசுகி, சா.முகம்மது யூசுப் (குளச்சல் யூசப்), கே.வி.ஜெய, கண்ணையன் தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயகத்தில் வைத்து வழங்கினார்.
மேலும் புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியர் மு.வளர்மதி, கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநர் மதிவாணன் ஆகியோரின் தொகுதிகளை முதல்வர் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சாகித்திய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Housing Board ,House ,Tamil Nadu government ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...