- திருப்பூரு கந்தசாமி
- சென்னை
- இந்து மதம் சார்ந்த மானியங்கள்
- அமைச்சர்
- சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம்
- தலைவர் சேகர்பாபு
- சென்னை மேயர்
- பிரியா
- பெரம்பூர்
- திருப்போரூர் நகர்
- திருப்பூருர்
- கந்தசாமி கோயில்
சென்னை: சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா நேற்று காலை பெரம்பூர் பகுதியில் நடைபயணம் செய்து மாநகராட்சி பூங்கா, குடிநீர் வாரிய அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சென்னை மெட்ரோ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிறகு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தவால்சாவடி பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் அம்பத்துாரை சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்து போது தனது ‘ஐபோன் 13 புரோ’ ரக மொபைல் போனை, தவறுதலாக காணிக்கை உண்டியலில் போட்டுள்ளார். அதன் பின், கோயில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி ஆய்வு செய்து உண்டியலுக்கு வரும் பணத்தை தவிர தங்கம், வெள்ளியாக இருந்தாலும் அவற்றை கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதனை ஏலத்தில் விடுவது தான் நடைமுறையாகும். அந்த வகையில் உண்டியலில் விழுந்த செல்போனை ஏலத்தில் விட்டோம். அதன் உரிமையாளர் தினேஷ் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் செலுத்தி பெற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
The post திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு: ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார் appeared first on Dinakaran.