×

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (ஜன.10) செயல்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, அனைத்து நியாயவிலைக் கடைகள் நாளை (ஜன.10) செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், முதலமைச்சர் அவர்கள், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக அனைத்து நியாயவிலைக் கடைகளும் நாளை (ஜன.10) செயல்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை. விவகாரம்: சட்டப்படி...