×

அரசு மாணவர் விடுதிக்கு புதிய சாலை அமைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

 

மண்டபம், ஜன.5: மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அரசு மாணவர் விடுதிக்கு செல்லும் வழியில் சாலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் கேம்ப் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதிக்கு முன்பு மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாணவர்கள் விடுதிக்கு மழைநீரில் வழியாக கடந்து செல்ல வேண்டும்.இந்நிலையில் விடுதிக்கு முன்பு பனை மர ஓலைகள், பலவகையான மரங்கள் மழைநீரில் அதிக நாளாக தேக்கமடைந்து தூர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் விஷ கொசுக்கள் விஷ வண்டுகள் உருவாகி வருகிறது. இதனால் மாணவர்கள் விடுதியில் அச்சத்துடன் தங்கி வருகின்றனர். இதனையடுத்து விடுதி அலுவலர்கள் தேசிய நெடுஞ்சாலை இருந்து விடுதிக்கு செல்ல தற்காலிகமாக சிமெண்ட் சாக்கு பையில் மணல் நிறைத்து பாதைகள் அமைத்துள்ளனர். அதில்தான் தற்போது மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் தொற்று நோயில் இருந்து பாதுகாக்க தேக்கமடைந்த மழை நீரில் மணல் மேவி நிரந்தரமாக கிராவல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு மாணவர் விடுதிக்கு புதிய சாலை அமைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Mandapam Camp ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து..!!