×

சிக்கிமில் பெய்லி பாலம் இடிந்து விழுந்தது

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் லாச்சுங் சூ ஆற்றின் மீது 200 அடி பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் சுமார் 25 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்நிலையில் நேற்று அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பாலத்தை கடந்தபோது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் ஆற்றில் விழாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. லாரி ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். பாலம் இடிந்த தகவல் அறிந்தவுடன் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அங்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். பாலம் சீரமைக்கப்படும் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றுப்பாலம் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது.

The post சிக்கிமில் பெய்லி பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Bailey ,Bridge ,Gangtok ,Lachung Chu River ,Sikkim ,Bailey Bridge Collapses ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...