- டிஎஸ்பி
- கர்நாடகா அரசு
- பெங்களூரு
- மதுகிரி
- ராமச்சந்திரப்பா
- மதுகிரி டி.எஸ்.பி
- கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம்
- தின மலர்
பெங்களூரு: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுகிரி டிஎஸ்பி ராமச்சந்திரப்பா கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி டிஎஸ்பி அலுவலகத்திற்கு நிலத்தகராறு குறித்து புகார் கொடுக்க வந்த பெண்ணை அங்குள்ள கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, டிஎஸ்பி ராமச்சந்திரப்பா (58) அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண்ணை தவறாக தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்தார். அந்த பெண்ணுடன் புகார் அளிக்க சென்ற நபர் அதை ஜன்னல் வழியாக வீடியோவாக எடுத்து பதிவிட, அது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ வைரலாகவே, டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானார். புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தும்கூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி சில்மிஷங்களில் ஈடுபட்ட டிஎஸ்பி ராமச்சந்திரப்பா மீது பிஎன்எஸ் 73, 75 மற்றும் 78 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூடுதல் எஸ்பி ரேங்க்கில் உள்ள அதிகாரி தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், தலைமறைவாக இருந்த டிஎஸ்பி ராமச்சந்திரப்பா கைது செய்யப்பட்டார். மேலும், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
The post புகார் அளிக்க வந்த போது போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசம்: வீடியோ வைரலானதால் அதிரடி கைது; சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவு appeared first on Dinakaran.