×

காசிரங்கா சரணாலயத்தில் காண்டாமிருகத்தின் முன்பு விழுந்த தாய், மகள் தப்பினர்: வீடியோ வைரல்

திஸ்பூர்: ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் தாயகமான அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாகும். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஜீப் மூலம் சவாரி செய்து ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் பிற விலங்குகளை ரசிக்கலாம். இந்த நிலையில் இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாக தற்போது பரவி வருகிறது. அதில், ஒற்றை கொம்பு காண்டாமிருகம் அருகே ஜீப் சென்றபோது ​​ஒரு இளம்பெண்ணும், அவரது தாயும் திடீரென தவறி தரையில் விழுந்தனர். அவர்கள் உதவி கேட்டு கதறினர். அப்போது சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை நோக்கி மற்றொரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக வந்தது. இருப்பினும் இன்னொரு ஜீப் வேகமாக வந்து 2 பேரையும் காப்பாற்றியது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

The post காசிரங்கா சரணாலயத்தில் காண்டாமிருகத்தின் முன்பு விழுந்த தாய், மகள் தப்பினர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kaziranga Sanctuary ,Dispur ,Kaziranga National Park ,Assam ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...