பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் 400 பக்கம் அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
The post ஜெயலலிதா நகைகள் யாருக்கு? தீபா தரப்பில் 400 பக்க எழுத்துபூர்வ மனு தாக்கல் appeared first on Dinakaran.