×

கேரள நர்ஸ் மரண தண்டனை ஏமன் அதிபர் அங்கீகரிக்கவில்லை: தூதரகம் விளக்கம்

புதுடெல்லி: கேரளாவை சேர்ந்த 37 வயதான நர்ஸ் நிமிஷா பிரியா கடந்த 2017ல் ஏமன் குடிமகனை கொலை செய்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2023 நவம்பர் மாதம் அவரது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில் அவரது தண்டனையை ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி அங்கீகரித்துவிட்டதாகவும், விரைவில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை ஏமன் நாட்டு தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஏமன் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில்,’ கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அதிபர் ரஷாத் அல்-அலிமி அங்கீகரிக்கவில்லை ’ என்று தெரிவித்துள்ளது.

The post கேரள நர்ஸ் மரண தண்டனை ஏமன் அதிபர் அங்கீகரிக்கவில்லை: தூதரகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Embassy ,New Delhi ,Nimisha Priya ,Supreme Court ,
× RELATED சீனாவில் வேகமாக பரவி வருவதால்...