×

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சபலென்கா – குடெர்மெடோவா இறுதிப் போட்டிக்கு தகுதி

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் கோப்பைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டியில் சபலென்கா – மிர்ரா ஆண்ட்ரீவா மோதினர். இதில், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரீவாவை, சபலென்கா எளிதில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் குடெர்மெடோவா, உக்ரைன் வீராங்கனை அனெலினா கலினினாவை, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கலினினாவை எளிதில் வென்றார். ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் செக் வீரர் ஜிரி லெஹெச்கா – பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோ மோதினர். இந்த போட்டியில் ஜிரி முன்னிலை பெற்ற நிலையில் டிமிட்ரோ காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேற நேரிட்டது. இதனால், ஜிரி லெஹெச்கா இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா, பிரான்சின் கியோவன்னி பெட்ஷி பெர்ரிகார்ட்டை, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டிகள் இன்று நடக்கவுள்ளன.

The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சபலென்கா – குடெர்மெடோவா இறுதிப் போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Brisbane International Tennis ,Sabalenka ,Gudermetova ,Brisbane ,Mirra Andreeva ,Brisbane International Tennis Cup ,Andreeva ,International Tennis ,Dinakaran ,
× RELATED பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பெலாரஸ்...